Police-Parvai

R.Dis.No.1132/2015

RNI. TNTAM/2015/66520

ban4
ban3
ban2
ban1
previous arrow
next arrow

Services

தமிழ்நாடு காவல்துறை தேசிய அளவில் 5வது இடத்தில் மிகச் சிறந்த காவல்துறையாக செயல்பட்டு வருகிறது. வாரத்தில் 7 நாட்களும் விடுமுறை இன்றி மக்களுக்காக சிறப்பாக பணியாற்றி வருகிறது. பொதுக்கூட்டம், மாநாடு என இதுபோன்ற எந்தவிதமான விழாக்களாக இருந்தாலும், அவற்றை எவ்வித இடையூறுமின்றி செம்மையாக கண்காணித்து வருகிறது. மக்களின் நலன் ஒன்றையே கருத்தில் கொண்டு செயல்பட்டு வருவது காவல்துறை.

உயிரை பணயம் வைத்து சரியான உணவு, உறக்கம் இல்லாமல் பணி ஆற்றும் துறை காவல்துறை. நமது காவலர்கள் பொதுமக்களுக்காகவும், நாட்டிற்காகவும் நேரம் காலம் பார்க்காமல் பண்டிகை தினங்கள், விடுமுறை நாட்கள் இப்படி எந்த ஒரு நாட்களையும் இவர்களுக்காக எடுத்துக் கொள்ளாமல் நாம் (பொதுமக்கள்) குடும்பத்துடன் இரவு நேரத்தில் தூங்கிக் கொண்டு இருக்கும் நேரம் நம் பாதுகாப்பு கருதி காவலர்கள் அவர்களின் குடும்பத்தை விட்டு எங்காவது ஒரு பகுதியில் ரோந்து பணியில் இருப்பார்கள். இப்படிப்படட தமிழக காவல்துறையின் பணிகள் எண்ணற்றவை.

காவல்துறை மக்களுக்கு பயனுள்ள வகையில்,

  • சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு (L & O)  

  • தமிழ்நாடு சிறப்புப் படை(Armed Police)

  • சிறப்புப் பிரிவு – உளவுத்துறை(SB – CID)

  • பொது மக்கள் பாதுகாப்பு(Civil Defence and Home Guards)

  • கடலோர காவல் துறை(Coastal Security Group)

  • தமிழகச் சிறைத்துறை(Tamilnadu Prisons)

  • பொதுமக்கள் வழங்கல் மற்றும் உளவுத்துறை(Civil Supplies, CID)

  • குற்றப் புலனாய்வு(Crime Branch, CID)

  • பொருளாதார சிறப்புப் பிரிவு(EConomic Offences Wing)

  • இரயில்வே காவல்துறை(Railways)

  • மாநில காவல்துறை போக்குவரத்து பிரிவு(State Traffic Planning Cell)

  • தமிழ் நாடு தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு சேவை(Tamilnadu Fire & Rescue Services)

  • பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் ஊர்க்காவல் படை(Civil Defence & Home Guards)

  • மதுவிலக்கு அமல் பிரிவு (Prohibition Enforcement Wing)

  • குடிமையியல் பாதுகாப்புப் பிரிவு (Protection and Civil Rights)

  • சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் (Social Justice and Human Rights)

  • செயல்பாடு – தமிழக ஆயுதப்படை மற்றும் ஆயுதப்படை பள்ளி (Operations – T.N. Commando Force & Commando School)

  • குற்றப் பிரிவு (நுண்ணறிவு) (Co-Intelligence)

  • காவலர் பயிற்சி கல்லூரி (Police Training College)

  • தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TAMIL Nadu Uniformed Service Recruitment)

  • மாநில குற்ற ஆவணக் கூடம் (State Crime Records Bureau)

  • மாநில மனித உரிமை விசாரணை (STATE Human Rights Commission)

  • தமிழ்நாடு அதிரடிப்படை

  • குற்றப்பிரிவு (Crime)

  • லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு காவல்துறை (Vigilance and Anti- Corruption)

    எனப் பல பிரிவுகளாக பிரிந்து மக்கள் பணியில் ஈடுபட்டு வருகிறது.